×

ஈரோட்டில் சிறுவணிகர்களுக்கு மாதந்தோறும் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

ஈரோடு:  ஈரோடு மாவட்ட சிறுவணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடனை வாரந்தோறும் திருப்பி செலுத்துவதற்கு பதிலாக, மாதந்தோறும் செலுத்தும் வாய்ப்பினை முதலமைச்சர் ஒப்புதலோடு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறுவலூர் ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கிராம சந்தையை அமைச்சர் திறந்து வைத்தார்.

கொரோனா பாதிப்பு  உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், உலக நாடுகளே பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ளனர். இந்நிலையில்,  மக்கள் அனைவரும் வருமானம் ஈட்ட முடியாமல், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் 261 பயனாளிகளுக்கு 87 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி காசோலைகளை அமைச்சர் செங்கோட்டையனும், சுற்றுசூழல் அமைச்சர் கே.சி.கருப்பனனும் வழங்கினர்.

மேலும், கடனை கூட்டுறவு வங்கியில் மாதந்தோறும் செலுத்தும் முறையை முதலமைச்சர் அனுமதியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஏற்படுத்தியுள்ளார்.

Tags : Sengottaiyan ,Children ,Erode , Erode, Small Business, Loan. Minister Sengottaiyan
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்