×

சோதனை சாவடியில் நடைபெற்ற கொரோனா திருமணங்கள்: மாநில எல்லைகளை கடந்த வாழ்க்கை பந்தம்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண்டபங்களிலும், கோவில்களிலும் நடைபெற வேண்டிய திருமணங்கள் ஊரடங்கால் கிருமி நாசினி தெளிக்க, முகக்கவசம் அணிந்து சோதனை சாவடியில் நிறைவேறியது கொரோனாவின் விநோதங்களில் ஒன்று. கொரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எளிமையாக வினோதமாக நடைபெற்று வருகினறன. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கேரளாவை சேர்ந்த 3 பெண்களை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

கொரோனாவும் கட்டுக்கடங்காமல், போக்குவரத்தும் தொடங்காமல், ஊரடங்கு நீட்டித்து கொண்டே போவதால் அவர்களின் திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சோதனை சாவடியில் திருமணத்தை நடத்த கேரள அதிகாரிகள் அனுமதி அளித்தனர். கேரள மாநிலம் காந்தனூரை சேர்ந்த சுகன்யாவுக்கும் உடுமலை குறிஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் சின்னாறு சோதனை சாவடியில் திருமணம் நடைபெற்றது. ஆன்ரோர் வாழ்த்துரைக்க ஆயிரமாய் பூச்சொரிய நாதசுர மேளம் முழங்க நடக்க வேண்டிய நடக்க வேண்டிய அவர்களின் திருமணம் சோதனை சாவடியில் கிருமி நாசினி தெளிக்க, முகக்கவசம் அணிந்து சோதனை சாவடியில் எளிமையாக நடைபெற்றது.

காந்தளூர் மிஷன் வாயில் பகுதியை சேர்ந்த வேதகாணி என்ற நங்கை கழுத்தில் அமராவதி நகர் பகுதியை சேர்ந்த முத்தப்பராஜா என்ற மணமகன் நாண் பூட்ட இனிதே தொடங்கியது அவர்களின் இல்லற வாழ்க்கை திருமணங்களுக்கு பல மாதங்களுக்கு மும்பே திட்டமிட்டு ஆயிரம் கனவுகளோடு காத்திருந்த மூணாறு பகுதியை சேர்ந்த கஸ்தூரியும், சென்னையை சேர்ந்த நிர்மல்குமாரும் தங்களின் வாழ்க்கை பயணத்தின் முதல் அடியை சோதனை சாவடியில் தொடங்கினர். உற்றார் உறவினர்கள் வாழ்த்துரைக்க நண்பர்கள் புடைசூழ புகுந்த வீட்டிற்க்கு அனுப்ப வேண்டிய மகளை கட்டுப்பாடு காரணமாக மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்து விட்டு வித்திட்டு நின்றனர் பெற்றோர்.


Tags : weddings ,Corona ,checkpoint ,state ,Corona Weddings , Checkpoint, weddings, state border, life bond
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...