×

மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மத்திய பாஜக அரசின் சாதனைகளை  மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய அரசின் சாதனைகள் குறித்து தமிழக பாஜகவினருடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, என்ன சாதனைகள் செய்துள்ளோம். மக்கள் நலனுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு நல்ல வாய்ப்பு. தனது பணியை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்வது கடமை. அந்த கடமையை செய்வதற்கு, இந்த வருடம் கொரோனா தடையாக உள்ளது.

கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்துள்ளது. இதனால், நமது கருத்தை மக்களிடம் வைக்க முடிகிறது. மக்களின் பேராதரவு காரணமாக, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். தனி மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததற்கு பிரதமர் மோடியின் சாதனையே காரணம். தனியாக வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் அமைத்துள்ளோம். லடாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன், என்று கூறியுள்ளார்.

Tags : Nirmala Sitharaman ,Corona ,Central BJP , BJP, Corona, Nirmala Sitharaman
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...