×

மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கப்படுகிறது: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  45,814 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 26,472 பேர் வீடு திரும்பியுள்ளனர். 18,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 மண்டலங்களில் நோய் தொற்று ஆயிரத்தை கடந்துள்ளது.

அதனையடுத்து சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது  என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். காய்ச்சல் முகாம்களில் இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார தூய்மைக்காக 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கப்படுகிறது. மேலும், தூய்மை பணியாளர்களை அழைத்து செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.


Tags : Commissioner ,Breakfast employees ,Madras Corporation ,Providers , Provides ,breakfast ,evening meals , Corporation,Commissioner
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...