×

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன: முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. தலைநகரில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், அரசு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தொழில்கள் முடங்கி கர்நாடக அரசு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏனென்றால் கர்நாடக அரசுக்கு வரும் வருவாயில் சுமார் 70 சதவீதம் பெங்களூருவில் இருந்து தான் வருகிறது. அதனால் மாநில அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பெங்களூருவில் சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பெங்களூருவில் நிலைமையை கையாள்வது குறித்து விவாதிக்கப்படும். பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், பெங்களூரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மேலும், சீல் வைப்பது அதிகரிக்க கூடாது என நினைக்கும் பெங்களூர்வாசிகள், கட்டாயமாக சமூக விலகல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், என்று கூறியுள்ளார்.


Tags : CM Yeddyurappa ,Bengaluru ,areas , Bangalore,corona,karnataka,CM Yeddyurappa
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...