×

பாதாளச்சாக்கடை பணியால் கண்மாய்க்குள் வாகனங்கள் இயக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி: காரைக்குடியில் பாதாளசாக்கடை பணியால் கண்மாய்க்குள் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிவடையாமல் உள்ளது. தற்போது காரைக்குடி செஞ்சி பகுதியிலிருந்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ள ரஸ்தா வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காரைக்குடி ஸ்வரம் சாலையில் இப்பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

தற்பொழுது சாலையில் இடது புறம் உள்ள கண்மாய் வழியாக வாகனங்கள் கடந்து செல்ல தற்காலிக மாற்றுப்பாதை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சை பாப்பாவூரணியை சேர்ந்த கிருஷ்ணகுமார் கூறுகையில், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள இப்பகுதியை கடக்க தண்ணீர் இல்லாத கண்மாய்க்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லும் இச்சாலையில் குறைந்தது ஒரு மெட்டல் ரோடாவது போட்டுவிட்டு, இந்த மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம் என தெரிவித்தார்.

Tags : motorists ,The Movement of Vehicles Within , Underground, under the eyes, vehicles
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...