×

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஊழியர்கள் வீசிவிட்டு செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியீடு!!!


திருச்சி:  திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் சடலத்தை வேனில் ஏற்றிசென்று கோட்டைமேடு காட்டுப்பகுதியில் வீசி விட்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 433 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 228 பேருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சியில் சமயபுரத்தை அடுத்த தனியார் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான வேனில் ஏற்றிச் சென்று, அருகிலுள்ள கோட்டைமேடு என்ற பகுதியில், 3 ஊழியர்கள் சேர்ந்து தூக்கி வீசியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த நபர் கொரோனாவால் இறந்தது உண்மைதான், இந்த தகவலை அவரது உறவினர்களுக்கும் தெரிவித்துவிட்டோம்.  உறவினர்களிடையே சடலத்தை ஒப்படைக்கக்கூடாது என்பதற்காக நாங்களே வண்டியில் ஏற்றி அந்த பகுதியில் எரிக்க நடவடிக்கை எடுத்து வந்தோம்.

ஆனால், சிலர் அதனை தவறாக சித்தரித்து, விடியோவை வெளியிட்டுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக விளக்கமளித்துள்ளர். மேலும், கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதாகவும், இதனால், உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் சமயபுரம் இருங்கலூர் கிராம மயானத்தில் உடல் புதைக்கப்பட்டதாகவும் சிவராசு தகவல் அளித்துள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி, அதில் ஈடுபட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coroner ,Trichy ,Corona ,Trichy pataipatai ,victim , Trichy, corona, corpse, staff, burying, video, display, release
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...