×

கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சத்துடன் பயணிக்கும் விவசாயிகள்

குளித்தலை: குளித்தலை ஒன்றியம் கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சத்துடன் விவசாயிகள் பயணிக்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் , விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சி பகுதியில் உள்ளது கருங்கல்லா பள்ளி. இப்பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. மேலும் இந்த வாய்க்கால் கரை வழியாக விவசாயிகள் விவசாய இடு பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம். மேலும் கிராமப்புறங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வோரும் வாய்க்கால் கரை வழியாக தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கருங்கல்லாபள்ளி வாய்க்கால் பாலத்திலிருந்து கரையோரம் செல்லும் மின்சார வயர்கள் அந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் வாய்க்கால் வழியாக செல்லும் விவசாயிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் கால்நடைகள் அதிகமாக மேய்ச்சலுக்கு சென்று வருகிறது. அதனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்னர் கருங்கல்லால் பள்ளி வழியாக செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Mattewaikal , Farmers,low-wiring,Mattewaikal
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...