×

மாயனூர் கதவணை செல்லும் வழியில் புதிய பாலம் கட்டும் பணி: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

கரூர்: மாயனூர் கதவணை செல்லும் வழியில்புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. காவிரி வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கு முன்னர் விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் மாயனுரில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டம் சீலப்பிள்ளையார்புதூர் தொட்டியம் பகுதியை இணைக்கும் வகையில் சாலைப்பாலமும் அமைந்துள்ளது. நகரபேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் பாலத்தில் சென்று வருகின்றன.

எனினும் கதவணை செல்லும் வழியில் குறுகிய வாய்க்கால் பாலம் இருந்ததால் போக்குவரத்து சீராக நடைபெற இடையூறாக இருந்தது. இதையடுத்து பழைய பாலத்தின் அருகே புதிய வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி வாய்க்கால்களில் நீர் திறக்கப்படுவதற்கு முன்னர் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Mayanur , Mayanur doorway, new bridge, people
× RELATED மத்திய அரசின் தனிநபர் கழிப்பிடம்...