×

ஆந்திராவில் டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து!: பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்!!

ஆந்திரா: ஆந்திராவில் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டத்தில் டீசல் பரவி திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ஆயில் டேங்கர்களை ஏற்றி வந்த கூட்ஸ் ரயில் இன்று காலை ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் அருகே வந்துகொண்டிருந்த போது சூர்ரெட்டிபாளையம் மற்றும் தங்கட்டூர் இடையே உள்ள மூசிநதி என்ற பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் ஆயில் ஏற்றி சென்ற டேங்கர்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நேரிட்ட சில நேரத்தில் டேங்கரில் இருந்த எண்ணெய்கள் வெளியே சிதறி மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த விபத்து காரணமாக 5 டேங்கர்கள் முழுவதுமாக தீக்கிரையாகின. இதனால் அப்பகுதியில் தீ ஜுவாலையுடன் பெரும் புகைமூட்டமும் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த விஜயவாடா ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினரும், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னை மற்றும் விசாகப்பட்டினம் செல்லக்கூடிய மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தானது தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் விபத்து நேரிட்ட இடத்தில் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra Pradesh , Andhra, diesel, freight train, derailment, accident, fire
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி