×

இந்திய வீரர்கள் தான் முதலில் தாக்குதலுக்கு தூண்டியது; லடாக் மோதலுக்கு இந்தியா தான் முழு பொறுப்பேற்க வேண்டும் : சீனா மீண்டும் சீண்டல்

பெய்ஜிங் :கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு இந்தியா தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சீனா கோரியுள்ளது. இந்திய ராணுவப் படையினர் தான் முதலில் விதிகளை மீறி எல்லைதாண்டி வந்ததாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஹாலோ லிஜியான் கூறியிருக்கிறார். மேலும் சீன ராணுவ படையினர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 6ம் தேதி நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி, இந்திய வீரர்கள் தான் முதலில் தாக்குதலுக்கு தூண்டியதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச விதிகளை மீறி இந்திய ராணுவத்தினர் தான் முதலில் சீன வீரர்களை தாக்கியதாக அந்நாடு கோரியுள்ளது. மேலும் ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து சீனாவின் முகாமை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. எல்லையில் பதற்றம் தணிய இந்தியா தான் ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 15, 16ம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 45 வீரர்களும் பலியாயினர். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன படையினர் அத்துமீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன.இதனிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் பதுங்கு குழிகள், டெண்ட் மற்றும் பிற கட்டமைப்புகளை அமைத்து அத்துமீற முயற்சித்ததை உறுதிபடுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன.

Tags : conflict ,India ,China ,Ladakh ,Indians , Indian players, attack, Ladakh, conflict, India, take charge, have, China, Sindal
× RELATED சொல்லிட்டாங்க…