×

திருப்பூரில் 22 வயதான ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவுக்கு பலி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க உறவினர்கள் கோரிக்கை

திருப்பூர்:  திருப்பூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை தரவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள  ரத்தினகிரியை சேர்ந்தவர் கணேசன். இவர்க்கு 3 சகோதரிகள். அதில் ஒருவர் மனநலம் குன்றியவராவார். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இதனால், பெருமளவு வருவாய் ஈட்டும் சூழல் இல்லை. இவருடைய வருமானத்தை எதிர்பார்த்து  மட்டுமே இவரது குடும்பம் காத்திருக்கும்

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 108 ஆம்புலென்சின் உதவியாளராக இவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பம்  பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் அரசு வேலை அளிக்கவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணேசனின் மரணம் திருப்பூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாக பதிவாகியுள்ளது. மேலும், இவரது உயிரிழப்பு ஆம்புலன்ஸ் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupur ,ambulance aide ,Corona , Thirupur, 22, Ambulance, Assistant, Corona, Killing, Government Work, Relative
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்