×

கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகாவில் இன்று தொடங்குகிறது SSLC தேர்வுகள்: நோய் தொற்று அச்சத்தில் பெற்றோர்கள்!!!

பெங்களூரு: கொரோனா பாதிப்புக்கிடையே கர்நாடகாவில் இன்று 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதால் பெற்றோர்கள் நோய் தொற்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தான் பெற்றோரின் எதிர்ப்யும் மீறி, இன்று தேர்வுகள் தொடங்குகின்றன. முன்னதாக தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகளை மாநில கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு தேர்வு அறையிலும் 18 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறை பெரியதாக இருந்தால் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் ஒவ்வொரு மாணவரும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் முன்பை விட கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags : parents ,SSLC ,panic ,Karnataka ,Corona ,corona panic , Corona, Panic Karnataka, SSLC exams, disease, infection, parents
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!