×

வீடு, டீக்கடையை உடைத்து கொள்ளை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே பழமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. நேற்று முன்தினம்  இரவு பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற கவிதா, அங்கேயே இரவு தங்கினார். நேற்று காலை கவிதாவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து, உடனே தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 சவரன் நகை, ₹10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதேபோல், பழமத்தூர் நெடுஞ்சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையை உடைத்து, அங்கிருந்த ₹3 ஆயிரம், சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : teak shop ,House , House, Teak Shop, Loot
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...