×

அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?... போக்குவரத்துத்துறை சார்பில் குறும்படம்

சென்னை: அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்பது பற்றி போக்குவரத்துத்துறை குறும்படம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு சொந்தமாக 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதேபோல் நீண்ட தூரம் பயணம் செய்வோரின் வசதிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை கொரோணா வைரஸ் பரவல் காரணமாக இயக்கப்படவில்லை. பிறகு மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு, 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

அந்த உத்தரவில் அனுமதி வழங்கப்பட்ட மண்டலங்களில் மட்டும் அரசு பஸ்கள் குறைவான அளவு தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்று பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் போக்குவரத்துத்துறை குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூக இடைவெளியுடன் இருக்கையில் அமர்ந்து பொதுமக்கள் பயணிக்க வேண்டும். பேருந்து பயணத்தின் போது எச்சில் துப்ப கூடாது. மாஸ்க் அணிந்து பயணிக்க வேண்டும். பஸ்சில் ஏறும்போது பின்புற வழியையும், இறங்கும் போது முன்புற வழியையும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Government Bus, Transport, Short Film
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...