×

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் அருகே அரசன் கழனியில் கடந்த 19ம் தேதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி ரவுடிகள் பிறந்தநாள் விழா கொண்டாடியது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களில், ஐந்து பேரை கைது செய்தனர். இந்நிலையில், அதேபாணியில் பெரும்பாக்கம் எழில் நகரிலும் கடந்த 5ம் தேதி 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் கோட்டூர்புரம், மவுன்ட் ரோடு, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவுடிகள்  என தெரியவந்தது.  இவர்கள்  மீது பள்ளிக்கரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : birthday , Buttercup, cake, birthday party
× RELATED ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’பை கலெக்டர்;...