×

வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.க்கு கொரோனா

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இவருடன்  கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் (66) தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில், அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.


Tags : Corona ,MLA ,Valparai , Former MLA of Valparai, Corona
× RELATED காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று