×

ஊரடங்கினால் வருமானம் இழப்பு; வக்கீல்களுக்கு வட்டியில்லா கடன் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஊரடங்கினால்  பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூரை சேர்ந்தவர் வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்த மனு: கொரோனாவால் வக்கீல்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வக்கீல்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Tags : Loss ,Lawyer ,governments ,state ,state governments , Curfew, loss of income, interest free loan, central, state government, iCord, notice
× RELATED வாடிக்கையாளர்கள் வரவில்லை; ஆர்டர்...