×

சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு; தமிழக காங்கிரசில் 36 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு: கொரோனா காலத்தில் கச்சிதமாக முடித்த கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்ற பின்பு இதுவரை எந்த நிர்வாகிகளும் மாற்றப்படவில்லை.  அவருக்கு மற்ற கோஷ்டி தலைவர்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்று மேலிடத்தில் புகார் செய்தார். எனவே, உடனடியாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று கட்சி தலைமையிடம் முறையிட்டார். அதன்படி, பெரிய பட்டியலை தயார் செய்து மேலிட ஒப்புதலுக்காக காத்திருந்தார். இந்த சூழ்நிலையில், கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  கொரோனா ஓரளவு  குறையும்பட்சத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிடும்.

அதற்குள் தனது ஆதரவாளர்கள் குறிப்பிட்ட அளவு கொண்ட புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதியாக உள்ளார். அதன் அடிப்படையில் கொரோனாவால் நாடே முடங்கியுள்ள நிலையில், கச்சிதமாக புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பதற்கான பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். விரைவில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு டெல்லி மேலிடம் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவர் அனுப்பிய பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும், 36 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் கட்சியினர் மத்தியில் வெளியாகியுள்ளது. இதில் சென்னை 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற்றுள்ள மாவட்ட தலைவர்கள் விவரம் வருமாறு: கன்னியாகுமரி கிழக்கு- சாமுவேல் ஜார்ஜ், திருநெல்வேலி மாநகர்- டி.வி.துரை, தூத்துக்குடி மாநகர்- வில்பிரெட் கதிரேசன், தூத்துக்குடி வடக்கு- கேசவன், தூத்துக்குடி தெற்கு- ஊர்வசி அமிர்தராஜ், ராமநாதபுரம்- ரமேஷ் பாபு, மதுரை தெற்கு-சைமன், மதுரை மாநகர்- வரதராஜன், திண்டுக்கல் மாநகர்- குப்புசாமி அல்லது ஜான்சி ராணி, திண்டுக்கல் மேற்கு- தண்டபாணி, திண்டுக்கல் கிழக்கு- ரசூல் மொய்தீன்,

திருப்பூர் மாநகர்- செந்தில்குமார், ஈரோடு தெற்கு- பழனிச்சாமி, கோவை தெற்கு- மகேஷ்குமார், திருச்சி வடக்கு- ராஜலிங்கம், பெரம்பலூர்- கிருஷ்ணன், தஞ்சை வடக்கு- ஓவியம் கிருஷ்ணசாமி, நாகப்பட்டினம்- அமிர்தராஜ், நாமக்கல் கிழக்கு- சித்திக், நாமக்கல் மேற்கு- டாக்டர் செழியன், சேலம் மேற்கு- வினய் கிருஷ்ணன், கள்ளக்குறிச்சி- தனபால், வேலூர் மாநகர்- தேவேந்திரன், வேலூர் புறநகர் -ஜெயபிரகாஷ், ராணிப்பேட்டை- அண்ணாதுரை, காஞ்சிபுரம் வடக்கு- ஆர்.செந்தில்குமார், திருவள்ளூர் தெற்கு- திருவேற்காடு ரமேஷ், திருவள்ளூர் மத்தி- நாஞ்சில் பிரசாத், திருநெல்வேலி கிழக்கு- ரூபி மனோகரன்,

கோவை மாநகர்- அழகு ஜெயபால் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, சென்னை 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. னெ்னை தெற்கு மேற்கு- எம்.பி.ரஞ்சன்குமார், சென்னை தெற்கு கிழக்கு- துரை நாடார், சென்னை வடக்கு மேற்கு- முனீஸ்வர கணேசன் அல்லது நிசார் அகமது அல்லது டில்லி பாபு, சென்னை வடக்கு கிழக்கு- எம்.எஸ்.திரவியம், சென்னை மத்தி  கிழக்கு சிவ ராஜசேகரன், சென்னை மத்தி மேற்கு- எம்.என்.ஜெ.கோபி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் ஆகியோர் தற்போது மாவட்ட தலைவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாக கூறப்படும் இந்த பட்டியல் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுக்கு பின்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

Tags : districts ,Chennai ,district leaders ,KS Alagiri ,Tamilnadu Congress ,Nadu Congress , Chennai, Tamil Nadu Congress, 36 New District Leaders, Corona, KS Alagiri
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...