×

ட்வீட் கார்னர்… இணைந்த கைகள்

2023ம் ஆண்டு பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை நடத்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து கூட்டாக விண்ணப்பித்துள்ளன. இந்த தொடரை நடத்துவதற்கான உரிமை தங்களுக்கு உறுதியாகக் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஆஸி. பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் நியூசி. பிரதமர் ஜெசிந்தா அர்டன் இருவரும், ட்விட்டரில் AsOne2023 என்ற ஹேஷ்டேகை உருவாக்கி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் வேற லெவலில் கலக்கப் போவதாகவும் தகவல் பதிந்துள்ளனர். இந்நிலையில், 2023 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பதை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு பிபா கவுன்சில் கூட்டத்தில் இன்று நடைபெற உள்ளது.

Tags : Corner , Australia and New Zealand
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி