×

சீனாவில் ஜோராக நடக்கும் நாய் கறி திருவிழா

பீஜிங்: சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அங்கு, தற்போது நாய்கறி திருவிழா ஜோராக நடக்கிறது. சீனாவில் கொண்டாடப்படும் பிரபல விழாக்களில் நாய் இறைச்சி திருவிழாவும் ஒன்றாகும் கடந்த 21ம் தேதி தொடங்கிய இது, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவது வழக்கமாகும். பல்வேறு இன நாய்களும் அடித்து, அரைகுறை உயிருடன் பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டு வகை வகையான உணவுகளும், வித்தியாசமான சூப்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதை ருசிப்பதற்காக  ஆயி.ரக்கணக்கானோர் திரள்வார்கள்.

சீனாவின் வுகானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்தான், தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களை நோய் தாக்கியுள்ளதோடு லட்சக்கணக்கான உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. இத்தகைய கொடிய கொரோனா வைரசில் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்வதற்கு சீனா தயாராக இல்லை. எனவேதான், தற்போது, அங்குள்ள குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் நாய் கறி திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை இந்த திருவிழா ஈர்க்கும்.

கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாய்களின் இறைச்சியை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஆனால், கொேரானா காரணமாக இந்தாண்டு திருவிழாவிற்கு மக்கள் குறைவாக வருவதாக நாய் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் பீட்டர் லீ கூறுகையில், ‘‘யூலின் நகரம் மாறும் என நம்புகிறேன். விலங்குகளின் நலனுக்காக மட்டுமல்ல; அதன் மக்களின் உடல் நலன், பாதுகாப்பிற்காவும் இந்த மாற்றம் வரும் என நினைக்கிறேன்,” என்றார்.

Tags : Dog Curry Festival ,China ,China Dog Curry Festival , China, Dog Curry Festival
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...