×

அட்ரா சக்கை...அட்ரா சக்கை; வெளுத்து கட்டுகிறது டும்டும் வெப்சைட்கள்: கொரோனா பீதியில் உலகமே கலங்குது கல்யாண ஆசை ரெக்க கட்டி பறக்குது

புதுடெல்லி: ஐடி தொழில் உட்பட பல தொழில்கள் முடங்கி விட்ட நிலையில், கல்யாண ஆன்லைன் தரகராக செயல்படும் ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்கள் செம பிசினஸ் பார்த்து வருகின்றன. முன்னணி மேட்ரிமோனி நிறுவனங்கள் வழக்கத்தை விட 30 சதவீதம் வரை வர்த்தகம் அதிகரித்துள்ளது. ஜாதகம் பார்த்து, பெண்ணை நேரில் பார்ப்பது எல்லாம் இந்த கொரோனா சமயத்தில் நடக்கிற காரியம் அல்ல. எனினும், கடந்த சில ஆண்டாகவே ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சடை்கள் மூலம் தான் பலரும் வரன் பார்க்கின்றனர். குறிப்பிட்ட பணம் கட்டி பார்க்கும் இந்த வெப்சைட்களில் நூற்றுக்கணக்கில் வரன் வரும் என்பதால் ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது கொரோனா பீதியால் உலகமே முடங்கி கிடக்கிறது. ஒரு சாரார் வீட்டில் முடங்கி  இருக்கின்றனர். இன்னொரு சாரார், வேலையும் இழந்து, அல்லது வேலையில் பாதி சம்பளம் வாங்கி, வீட்டை நடத்த முடியாமல், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்தும் வருகின்றனர். இதற்கு நடுவே, நடுத்தரப்பட்ட மக்கள், திருமண வயது வந்தவர்களை வீட்டில் வைத்து கொண்டு பயப்படுகின்றனர். அதனால், ஆன்லைன் மூலம் வரன் பார்ப்பது அதிகரித்து விட்டது. நாடு முழுவதும் உள்்ள முன்னணி ஆன்லைன் மேட்ரிமோனி நிறுவனங்கள், 20 முதல் 30 சதவீதம் அதிகமாக வர்த்தகம் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: எங்களிடம் ஆன்லைனில் வரன் பார்ப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. எங்களுக்கு இப்போது தான் அதிக வேலை. வரன் தேர்வு செய்யப்பட்டதும் இரு தரப்பு குடும்பத்தினரையும் வீடியோ கான்பரன்ஸ வசதி மூலம் பேச வைப்பது, தீர்மானிக்க வைப்பது, கடைசியில் நிச்சயதார்த்தம் செய்து வைப்பது வரை எங்கள் பொறுப்பு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வரன் பார்த்து ஒப்புக்கொண்ட பின் அவர்கள் இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசி, கடைசியில் திருமண போட்டோ மட்டும் அனுப்பி வைத்து எங்களுக்கு நன்றி தெரிவிப்பர்.

ஆனால், இப்போது கொரோனா சமயத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்களுக்கு எங்கள் உதவி தேவைப்படுகிறது. எங்களிடம் பலரும் கோரிக்கை வைத்ததால், நாங்கள் திருமணம் நடப்பது வரை பல விஷயங்களில் உதவி வருகிறோம்.
இந்த சமயத்தில், வரன் பார்ப்போர் எண்ணிக்கை மட்டும் அதிகபட்சம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நிச்சயதார்த்தம் வரை போன வரன்கள் 25 சதவீதம் வரை போயுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தனித்தனி வெப்சைட்கள்
* திருமண வயது வந்தோர்
* விதவைகள்
* முதிர்கன்னிகள்
* ஊனமுற்றோர்
* சமூக ரீதியாக
* வேலை வாரியாக
* சம்பளம் அடிப்படையில்

Tags : Adra ,world , Dummy websites, corona panic, marrying desire
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்