×

திரிணாமுல் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா வால் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ. இறந்தார். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பால்டா தொகுதி எம்எல்ஏ. தமோனஷ் கோஷ் (60), கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்,  சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவரது டிவிட்டரில், ``தமோனஷ் கோஷின் மறைவு மிகவும் வருந்தத்தக்கது. பால்டா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ். 1998ம் ஆண்டு முதல் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’’ என கூறியுள்ளார்.

Tags : Trinamool MLA ,Corona Trinamool ,Corona , Trinamool MLA, Corona, Killed
× RELATED கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.: பிரதமர் மோடி