×

யாரும் ஒத்துவரலியே... ஐ.நா. கவலை

வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்றை கையாளுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு இல்லை என ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐநா பொது செயலாளர்  ஆன்டனியோ கட்டரெஸ் கூறியதாவது:
கொரோனா சீனாவில் தொடங்கியது. ஐரோப்பாவிற்கு சென்றது. பின்னர் வடஅமெரிக்கா மற்றும் தற்போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பரவியுள்ளது. தற்போது சிலர் கொரோனாவின் இரண்டாவது அலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரும் என்கின்றனர். இதுவரை கொரோனவை கையாளுவதில்  நாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை. கொரோனா நோய் தொற்றை நாடுகள் ஒன்றிணைந்து எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், சிகிச்சை முறைகள், சோதனைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதை நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுதான் கொரோனா நோய் தொற்றை ஒழிக்கும் வழியாகும். வேலை இழப்பு, வன்முறைகள் அதிகரிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண்பது,  அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக மதிப்பளித்தலை ஒருங்கிணைப்பதும் நோய் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கு உதவும். தற்போதைய சூழலில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாதது குறித்து நான் விரக்தியடைகிறேன். ஆனால் புதிய தலைமுறையினர் எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை மாற்றமுடியும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Nobody ,UN , Corona Disease, Antonio Cutres
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது