×

கிருஷ்ணகிரியில் கேஆர்பி அணையிலிருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து செங்கல் சூளைக்கு விற்பதாக புகார்!!!

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல்மண்ணை விதிகளை மீறி செங்கல் சூளைகளுக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இங்கு, 4 யூனிட் வண்டல் மண் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கேஆர்பி அணையானது 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. இந்த அணையை தூர்வார வேண்டுமென, விவசாயிகள் அளித்த கோரிக்கையை ஏற்று, குடிமராமத்து பணிகளின் கீழ், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலை முதல் மாலை வரை சுமார் 500 லாரிகளில் கேஆர்பி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது அணையிலிருந்து செங்கல் சூளைகளுக்கு 4 யூனிட் வண்டல் மண் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. விவசாயிகளின் தொடர் குற்றசாட்டு தொடர்பாக கேஆர்பி அணையின் உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, வருவாய் துறையினர் சார்பில் வண்டல் மண் எடுக்க அனுமதி தரப்படுவதாகவும், எடுக்கப்படும் மண் எங்கு செல்கிறது என்பதை கிராம நிர்வாக அலுவலக வாட்டாச்சியார்தான் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி வாட்டாச்சியரிடம் கேட்டபோது, தங்களுக்கு இதுபற்றி புகார் வந்ததாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் லாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri ,KRP ,dam , Krishnagiri, KRP dam, sedimentary soil
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி