×

கொரோனா பிடியில் தூத்துக்குடி.:இன்று ஒரே நாளில் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெல்லையை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 37 வயது போலீஸ்காரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையம் மூடப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸ்காரர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மேலும் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தில் உள்ள 8 மாத குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Tuticorin , Tuticorin,Two people,died,same day
× RELATED மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்