×

காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்திக்கே பாபா ராம்தேவின் கொரோனில் மருந்து உரிமம் பெற்றது; கொரோனாவுக்கு இல்லை : உத்தரகாண்ட் அரசு திடுக்கிடும் விளக்கம்


டேராடூன் : சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்ற அடிப்படையில்தான் ராம்தேவின்  கொரோனில் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது; கொரோனாவுக்கு அல்ல என்று உத்தரகாண்ட் அரசு திடுக்கிடும் விளக்கம் அளித்திருக்கிறது. யோகா குரு பாபா ராம்தேவ் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செவ்வாயன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் இந்த மருந்தின் விளம்பரங்களை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டதோடு , நிறுவனம் கோரிய ‘வெற்றிகரமான சோதனை மற்றும் சிகிச்சை’ என்பதற்கான விவரங்களையும் வெளியிட அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக உத்தரகாண்ட் அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், பாபா ராம்தேவின்   கொரோனில் மருந்து என்பது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதனடிப்படையில் மட்டும் தான் அந்த மருந்துக்கு உத்தரகாண்ட் ஆயுஷ் துறை விற்பனைக்கான உரிமம் வழங்கியிருக்கிறது என விளக்கம் தந்துள்ளது. மேலும் ராம்தேவின் கொரோனில் மருந்து, கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்தக் கூடிய மருந்து என்பதற்காக நாங்கள் லைசென்ஸே கொடுக்கவில்லை. அது தவறானது என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்தது தொடர்பாக ராம்தேவ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

Tags : Uttarakhand ,Baba Ramdev , Fever, Immunity, Baba Ramdev, Coronel, Drug, License, Corona, No, Uttarakhand Government, Stagger, Explanation
× RELATED உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை...