×

சீன பொருட்களை புறக்கணிக்கும் நோக்கம்: 15,000 வீடுகளில் இருக்கும் சீன மின் மீட்டர்களை மாற்ற உ.பி அரசு முடிவு!

லக்னோ: சீன பொருட்களை புறக்கணிக்கும் நோக்கத்தில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்ற உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவத்தால் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பலதரப்புகளை சேர்ந்தவர்களும் கோரிக்கை வைத்தனர்.

எல்லையில் சீனா உடனான மோதலுக்கு பிறகு, இந்தியாவில் சீன பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநில கோரக்பூரில் உள்ள 15 ஆயிரம் வீடுகளில் மின் ஓட்டத்தை அளவிடும் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய இந்திய தயாரிப்பு மீட்டர்களை பொறுத்த அம்மாநில மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே செயல்பாட்டில் மற்றும் பராமரிப்பு பணிகளில் உள்ள சீன பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் என உத்திரபிரதேச மின்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வீடுகளில் பொருத்தப்பட்ட சுமார் 15 ஆயிரம் சீன மின்சார மீட்டர்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் மின்சார மீட்டர்களில் 1.50 லட்சம் இணைப்புகளில் 10 சதவீதத்தின்படி, சுமார் 15,000 மின்சார மீட்டர்களை அகற்றவும், ஸ்மார்ட் மின்மோட்டர்களை பொருத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Chinese ,households ,UP , Chinese goods, 15,000 houses, electric meters, UP government, decision
× RELATED மத்திய அரசின் ஊக்குவிப்பு...