×

ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கிய 15 சாய ஆலைகள் மூடல்.: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கிய 15 சாய தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார். கோபிச்செட்டி பாளையம் அருகே உள்ள ஓடத்துறை ஏரியில் ரூ.3.20 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கிய 15 சாய தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் நீர் நிலைகள் தூர் வரப்பட்டதால் கடந்த காலங்களை விட தற்போது 5 மடங்கு தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறதாக என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார். அதேபோல் தேவையான அளவுக்கு தடுப்பணைகளும் அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Closing ,Erode ,Minister , Closing ,15 dye , Erode,Minister, warned
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்