×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் பிடிப்பட்டனர்..! இந்த வருடத்தில் மட்டும் 119 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த சோதனையில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் பிடிபட்டனர். பொத்காமுகம், சான்போரா அதூராவில் போலீஸ்- சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து நடத்திய சோதனையில் 4 பேரும் பிடிபட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், சோபூர் மாவட்டம் போத்கா முகாம் மற்றும் சான்போரா அதூரா ஆகிய இடங்களில் போலீசார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் 119 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். ரியாஸ் நைகோ, அப்துல் ரெஹ்மான், சுபைர், குவாரி யாசிர், ஜுனைத் ஷெரி, புர்ஹான் கொக்கா, ஹைதர், தாயப் வாலித் என்று காஷ்மீரில் தீவிரவாதிகளின் முக்கிய புள்ளிகளாக இருந்த பலர் சுடடுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று  தில்பாக் சிங் கூறியுள்ளார். ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் ரியாஸ் நைகோ சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்ட போது பாதுகாப்பு படையினரால் ரியாஸ் நைகோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டிஜிபி தில்பாக் சிங் கூறியதாவது:
இதனை நாங்கள் ஒன்று, இரண்டு மாதங்களில் செய்யவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு, அதனை செயல்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறோம். சரியான திட்டமிடுதல் மற்றும் உளவு தகவல்கள் தான் இதற்கு முக்கிய காரணம். சில தாக்குதல்கள்  ராணுவத்துடன், காஷ்மீர் போலீசும் இணைந்து நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காஷ்மீர் காவல்துறையின் உளவுத்துறை தகவல்கள் தான் காரணம். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தோய்ப்பா, அன்சார் என்ற எந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் தற்போது தலைவர்கள் இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் பல தீவிரவாத அமைப்புகளை மொத்தமாக செயல் இழக்க செய்யவோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : associates ,terrorists ,Jammu ,Kashmir , Jammu, Kashmir, terrorists killed 119 terrorists
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...