×

லஞ்சம் வாங்கிக் கொண்டு போலி இ-பாஸ் வழங்கிய சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!!

சென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரூ. 3,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுக்கொண்டு தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி, தலைமைச் செயலக அலுவலக ஊழியர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாக 2 வருவாய் ஆய்வாளர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் வழங்குவதாக ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் திட்டவட்டமாக மறுத்து வந்தனர். இந்த நிலையில் போலி இ-பாஸ் வழங்குவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த வருவாய்துறையை சேர்ந்த குமரன், உதயகுமார் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு முறைகேடாக இ-பாஸ் வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்கள் இருவரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை யொட்டி அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் முறையான இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளியூர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai Municipal Corporation ,District Collectorate ,District Collector , Five employees, Chennai Municipal Corporation,District Collectorate, allegedly accepting, bribe
× RELATED 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு