×

அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை பன்றிகளிடம் வெற்றி : ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்!!

லண்டன் : அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் சோதனை தடுப்பூசியை இரண்டு தடவைகளாக பன்றிகளிடம் பரிசோதித்த போது அவற்றிடம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி தற்போது மனித சோதனையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் AZD1222 தடுப்பூசியை, பிரிட்டனின் பிர்பிரைட் ஆராய்ச்சி அமைப்பு  பன்றிகளிடம் சோதித்து பார்த்தது. அதில் முதலில் ஒரு டோசும் அதற்குப் பிறகு பூஸ்டர் டோசும் அளிக்கப்பட்டபோது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆய்வுகள் தொடரப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு இரண்டு டோசுகள் கொடுத்தால்  நோய் பாதுகாப்பு கிடைக்கும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Scientists ,AstraZeneca ,Oxford , AstraZeneca, Institute, Corona, Vaccine, Experiment, Pigs, Success, Oxford, Scientists
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு