×

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 461-ஆக உயர்வு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்  இதுவரை இல்லாத அளவு இன்று ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 461 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,215-லிருந்து 4,56,183-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011-லிருந்து 14,476-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190-லிருந்து 2,58,685-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  இதுவரை இல்லாத அளவு இன்று ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொற்று பரவுவதை தடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை நடத்தப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்திருக்கிறது. இதில் 250 நபர்களின் தொற்று என்பது கடந்த 20 நாட்களிலேயே அதிகரித்ததாகும். இதனால் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனிடையே தற்போது புதுச்சேரியில் 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சிகிச்சையில் 226 பேரும், குணமடைந்து 175 பேர் இருந்த போதிலும், புதுச்சேரி எல்லை பரப்பை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிகபட்ச அளவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாதிப்பு எண்ணிக்கையானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனைப்போலவே பச்சைமண்டலமாக இருந்த காரைக்காலிலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்தவர்களால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Puducherry ,deaths , Puducherry, corona, infection, confirmation:, number, rise
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு