×

மதுரையில் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் காமராஜ் பேட்டி!

சென்னை:  முழு முடக்கம் காரணமாக மதுரையில் ரூ. 1000 உதவித்தொகை வழங்குவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா நிவாரண உதவி ரூ. 1000 வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 53.33 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டதாகவும், மேலும், 75 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மதுரையில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு இன்று முதல் ஜூன் 30 வரை கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அனைவரும் பொருளாதாரரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், நிவாரண நிதி குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் முடிவெடுப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Government ,Kamaraj , Madurai, Rs.1000, relief, supply, state, decision, Minister, Kamaraj, Interview
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...