×

இந்தியா - சீனா பிரச்னையை தீர்க்க வெளிநாட்டினர் உதவி தேவையில்லை: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

ரஷ்யா: இந்தியா சீனா இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வெளியாட்களின் உதவி தேவையில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் லடாக் எல்லையில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 76 பேருக்கு காயம் ஏற்பட்டது. கற்கள், ஆணி அடிக்கப்பட்ட கம்பிகள், இரும்பு கம்புகள் உள்ளிட்டவற்றால் சீன ராணுவம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 45 சீன வீரர்கள்  பலி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியா - சீனா இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வெளியாட்களின் உதவி தேவையில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் என இரு நாட்டின் எல்லைப் பிரச்னை குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. ரிக் எனப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய  நாடுகளின் வெளியுறவுத்துறை  அமைச்சர்கள் காணொளி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இருநாட்டு பிரச்சனையில் ரஷ்யா மத்யஸ்தம் செய்யும் என கூறப்பட்டது. இந்த சூழலில் கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா - சீனா இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வெளியாட்கள் உதவி தேவையில்லை, அவர்களே பிரச்சனைகளை தீர்த்து கொள்வர் என கூறியுள்ளார். இரு நாடுகளும் அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Foreigners ,Russian ,Foreign Minister ,India ,China , India, China, problem, resolve, foreigners, aid, Russian Foreign Minister, Minister, comment
× RELATED சொல்லிட்டாங்க…