×

காளையார்கோவில் ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறை

காளையார்கோவில்: காளையார்கோவில் பகுதியில் நடைபெறும் விபத்துகளுக்கு முதலுதவி மட்டுமே கிடைக்கின்றது. சிகிச்சைக்கு சிவகங்கை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு போதுமான ஊழியர்கள் இல்லாமல் வாரத்திற்கு இரண்டு தினங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் தனியார் லேபிள் எக்ஸ்ரே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்தபோது எக்ஸ்ரே பிரிவில் ரேடியோ கிராப்பர், இருட்டறை உதவியாளர், எக்ஸ்ரே உதவியாளர் மொத்தம் 3 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அதேபோல் மகப்பேறு மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கான மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றார்கள். மருத்துவமனையில் கடைநிலை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம்  தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான எந்த வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் தலைவலி, காய்ச்சல், பல் வலி போன்ற சிறு வியாதிகளுக்கு மட்டுமே மருத்துவம் கிடைக்கிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு போதுமான மருந்து மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும். காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctors ,Kaliyariko ,Shortage , shortage ,doctors , GHC , Kaliyariko
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை