×

மண்டல எல்லைகளை தாண்டுவதாக புகார் பழநி- உடுமலை சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்: இ- பாஸ் இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்

பழநி: பொதுமக்கள் மண்டல எல்லைகளை தாண்டுவதாக வந்த புகாரையடுத்து பழநி- உடுமலை சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இ- பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கை தொடுவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலத்திற்குள் போக்குவரத்து மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மதுரை மண்டலத்திற்குள் திண்டுக்கல் மாவட்டம் உள்ளடக்கப்பட்டது.     திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருக்கும் மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட ஊர்கள் கோவை மண்டலத்திற்குள் உள்ளடக்கப்பட்டன.

மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இதனால் இந்த எல்லையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமானோர் இந்த எல்லைகளின் வழியாக மதுரை மண்டலத்திற்குள் அதிகளவு நுழைய ஆரம்பித்தனர். கோவையில் இருந்து மடத்துக்குளம் வரை வந்து அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அமராவதி பாலத்தை கடந்து திண்டுக்கல் எல்லைக்குள் நுழைந்து வந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று முதல் பழநி- உடுமலை சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு வேலைக்கு சென்று வந்த பலர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழநி- உடுமலை சாலை சாமிநாதபுரம் சோதனை சாவடி வழியே வந்த வாகனங்களை சப்கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது இ- பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.   


Tags : road Bus traffic stop ,road ,Pudani - Udumalai , Bus traffic, stop , Pudani - Udumalai, road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...