×

சிவகாசி தாலுகா ஆபீசில் மக்களுக்கு அனுமதி மறுப்பு

சிவகாசி: சிவகாசியில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் மற்றும் இ-சேவை மையம் மூடப்பட்டது. தாலுகா அலுவலகம் வர பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதித்து பலியாகியுள்ளார். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை வருவாய்த்துறையினர் அடையாளம் கண்டு தனிமைபடுத்தி வைத்துள்ளனர். இருந்த போதிலும் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரை அடையாளம் கான்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சிவகாசி பகுதியில் கொரோனா தொற்று கூடுதலாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையம் மற்றும் இ சேவை மையம் மூடப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் நுழைவு பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அலுவலகத்தின் முன்புறம் குடிமைப்பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் கார்டு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பாக தனி வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். கொரோனா நோய் தொற்றினை தடுக்க , தேவையின்றி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும் என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாலுகா அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவகாசி பகுதியில் கொரோனா தொற்றினை தடுக்கும் பொருட்டு, தாலுகா அலுவலகத்திற்கு மனுதாரர்கள் வருவதற்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக எந்த தேவையாக இருந்தாலும் ஆன்லைனில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிரமத்தினை பொறுத்து கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினர்.



Tags : Sivakasi Taluk Office , Denial,permission,people , Sivakasi Taluk Office
× RELATED ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி...