×

மெக்சிகோ நாட்டின் ஒக்ஸாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு!!!

மெக்சிகோ :  மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பசுபிக் கடலோர மாநிலமான ஓக்சாக்காவில் உள்ள சாண்டமரியா என்ற நகரை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இவை  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதனால், அருகில் உள்ள ஹோண்டுராஸ், வெர்ட்டாமாலா மற்றும் எல்ஸார்வடால் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதா தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அனைத்து கட்டிடங்களும் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால், அங்கிருந்த மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும், நோயாளிகளும் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அங்கு பதற்றம் குறையும் வரை அவர்கள் அனைவரும் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டனர். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். பசுபிக் கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 355 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : earthquake ,region ,Mexico ,Register ,Oaxaca , Mexico, Oaxaca, Powerful, Earthquake, Richter Scale, Record 7.4
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்