×

சந்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட 7 கிராமங்களில் 10 நாள் சுய ஊரடங்கு: கடைவீதிகள் வெறிச்சோடியது

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், 10 நாட்களுக்கு 7 கிராமங்களில் சுய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை முதலே தெருக்கள் வெறிச்சோடியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போச்சம்பள்ளி மற்றும் சந்தூர், காட்டாகரம் பஞ்சாயத்து உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்று கூடி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 10 நாட்களுக்கு மளிகை கடைகள் மற்றும் சிறு வணிக கடைகளை மூட முடிவு செய்தனர். இதன்படி, நேற்று காலை போச்சம்பள்ளியில் எந்த கடைகளும் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவோர் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு 7 கிராம மக்களும் ஒத்துழைப்பு அளித்து, நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 7 கிராமங்களிலும் நேற்று எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. வீதிகள் வெறிச்சோடியது.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, போச்சம்பள்ளி உள்ளிட்ட 7 கிராமங்களில் வரும் 10 நாட்களுக்கு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போச்சம்பள்ளியில் உள்ள கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.


Tags : villages ,Pochampally ,self-curfew ,shops ,Chandur , 10-day self-curfew, 7 villages, including Chandur and Pochampally,lined up
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை