×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரம்: மருந்து தொழிற்சாலையை எதிர்மனுதாரருக்கு சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரத்தில் மருந்து தொழிற்சாலையை எதிர்மனுதாரருக்கு சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர் ஸ்டாலின்ராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருந்தால் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Vedanthangal Bird Sanctuary ,factory , Vedanthangal Bird Sanctuary, Affairs, Pharmaceutical Factory, Respondent, High Court
× RELATED சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்து...