×

அமெரிக்காவில் 3 இந்தியர்களின் சடலங்கள் மீட்பு.: கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை?

அமெரிக்கா: அமெரிக்காவில் மூன்று இந்தியர்கள் மர்மமான முறையில் நீச்சல்குளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளையும் பிழிந்து கொண்டிருக்கிறது. இதனால், பல பெரிய நிறுவனங்கள் கூட இழுத்து மூடப்பட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில்  மட்டும் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள். தற்காலிக பணியாற்றி வரும் இந்தியர்களிடம் இருந்து அமெரிக்கர்களுக்கு பணிகளை கொடுக்கவே மறைமுகமாக எச்1பி, எல்1 விசாக்களை புதுப்பிக்காமல் ரத்து செய்து வருகிறது அமெரிக்கா.

எச்1பி விசா ரத்து உத்தரவை மீண்டும் டிசம்பர் வரை அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார். இதனால், 3 லட்சம் பேரின் அமெரிக்க கனவு பொசுங்கியது. அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2-பி மற்றும் எல்1 உட்பட  ‘எல்’ ரக விசாக்கள் அளிக்கப்படுகிறது. இதை வைத்துதான் இந்தியர்கள் 5 லட்சம் பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவ்வப்போது விசாவை புதுப்பித்து தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் இந்தியர்கள் பலருக்கு வேலை இல்லாததால் இது போன்ற மர்மமான உயிரிழப்புகள் அமெரிக்காவில் தொடர்ந்து வருகிறது.

மிடில்செக்ஸ் கவுண்டி எனுமிடத்தில் பாரத் பட்டேல் என்ற முதியவர்(62), அவரது 33 வயதான மருமகள் நிஷா மற்றும் 8 வயதான பேத்தி ஆகியோர் உயிரற்ற நிலையில் தங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள நீச்சல் குளத்தில் மிதப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மூவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். நீரில் மூழ்கியது தற்செயலா என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : United States ,Indians ,murder ,suicide ,murders , 3 Indians, bodies, recovered, United States,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்