×

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் லேப்டாப்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும், பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டில் படித்து சென்றவர்களுக்கு தந்ததுபோக தற்போது படிக்கும் கல்வி மையங்களில் ஒப்புகை கடிதம் பெற்று வராத 63 மாணவர்களுக்கு தருவதற்காக அரசு மடிக்கணினிகள் பள்ளி அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது இந்த மடிக்கணினிகள் பத்திரமாக இருந்தது.

தொடர்ந்து செவ்வாய்கிழமை ஆசிரியர்கள் 10ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் பட்டியலை தயாரிக்க வந்தனர். அப்போது அலுவலத்தில் இரும்பு கதவு வெல்டிங் மூலம் ஆள் நுழையும் அளவு வெட்டப்பட்டு அலுவலகத்தில் இருந்த 63 மடிக்கணிகளில் 16 திருடப்பட்டிருந்தது. மீதம் 47 மட்டும் இருந்தது. மேலும், பள்ளிக்கூட அலுவலக அறையின் மின்சாதன பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதை கண்ட ஆசிரியர்கள் இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியில் மடிக்கணினிகளை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Theft ,government school ,Kummidipoondi , Kummidipoondi, Government School, Laptop Theft
× RELATED தலைமை செயலாளர் எதிர்மனுதாரராக...