×

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வந்த 7 பேருக்கு தனிமை

மாமல்லபுரம்: சென்னையில் இருந்து மாமல்லபுரம் வந்த 7 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வீடுகளில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந் 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை, 12 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி, ஒத்தவாடை தெருவில் உள்ள உறவினரை பார்க்க, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை கெல்லீஸ்சில் இருந்து 3 பேர், மந்தைவெளியை சேர்ந்த 2 பேர்,  தி.நகரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 7 பேர் வந்து தங்கினர். இதுபற்றி வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், சென்னையில் இருந்து 7 பேர் வந்ததும், அவர்கள் 3 வீடுகளில் வந்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவர்கள் வந்து தங்கிய நாட்களை கணக்கில் கொண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு, உள்ளே நுழையாதே என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினர்.

இதையடுத்து, அவர்கள் 7 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் அடைக்கப்பட்டனர். வருவாய்த்துறை கண்காணிப்பில் 7 பேரும் கொண்டு வரப்பட்டனர். மேலும், சென்னையில் இருந்து 7 பேர் வந்து தங்கியுள்ளதால், மாமல்லபுரத்தில் உள்ள பொதுமக்கள் நமக்கும் கொரோனா வந்து விடுமோ என பீதியில் உள்ளனர்.

Tags : Chennai ,Mamallapuram , Chennai, Mamallapuram, Loneliness
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு