×

ஐஏஎஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள ஐ.எம்.ஏ நிதி நிறுவனம் ரூ 1600 கோடிக்கு அதிகமாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான  விஜய சங்கருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர் ரூ 1.5 கோடி லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், திடீரென்று நேற்று வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திலக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : IAS officer , IAS officer commits suicide
× RELATED தங்கக்கடத்தல் வழக்கில், ஐ.ஏ.எஸ்...