×

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் அடித்து கொலை; காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதி விசாரணை வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: “சாத்தான்குளத்தில் வியாபாரிகள் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்):  எந்த தவறையும் செய்யாத நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காவல்துறை தான் முழு பொறுப்பாகும். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வைகோ (மதிமுக பொது செயலாளர்): இது முழுக்க முழுக்க சாத்தான்குளம்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்): மரணம் குறித்து குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களை போக்குவதுடன் உரிய நீதி வழங்க  வேண்டும். நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு மரணங்களையும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி கொலை வழக்காகப் பதிவு செய்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊர்வசி அமிர்தராஜ் (தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர்): இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறையினர் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

டிஜிபியிடம் கனிமொழி எம்பி மனு
திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காவல்துறை தலைவர் (சட்டம் ஒழுங்கு) திரிபாதியிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலீசார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Merchants ,leaders ,Satan ,pool ,party ,murderers , The devil, merchants, slaughter, murder, judiciary, political party leaders
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...