×

இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய காசியின் நெருங்கிய கூட்டாளி கைது: சிபிசிஐடி போலீஸ் அதிரடி

நாகர்கோவில்: இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து சீரழித்த காசியின் நெருங்கிய கூட்டாளி கைதாகி உள்ளான். சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களுடன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற  சமூக வலைதளங்களில் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்ைத சேர்ந்த காசி மற்றும் அவனது கூட்டாளியான டைசன் ஜினோ (19) ஆகியோர் கைதாகி இருந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருவரிடமும், 5 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்தது. காசி மற்றும் டைசன் ஜினோவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், செல்போன்கள், மெமரி கார்டு போன்றவற்றில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் செல்போன் நம்பர்களை கண்டுபிடிக்க சென்னையில் இருந்து சைபர் க்ரைம் போலீசார் வந்தனர்.

தொழில் நுட்ப உதவியுடன் அவை ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக காசியின் ெநருங்கிய நண்பனான நாகர்கோவில் கணேசபுரத்ைத சேர்ந்த பேக்கரி உரிமையாளரின் மகன் தினேஷ்(24) என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இவன், காசியுடன் இணைந்து இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி பணிய வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் காசியின் மற்றொரு கூட்டாளியான கவுதம், வெளிநாட்டில் உள்ளார். அவரை கைது செய்ய விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விரைவில் கவுதமும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. இவர்கள் தவிர மேலும் சில கூட்டாளிகள், இளம்பெண்களுடன் போனில் மிரட்டும் வகையில் பேசி உள்ளனர். அதற்கான ஆதாரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன. எனவே கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Tags : associate ,teenagers ,Cashi , Teenager, porn video, kasi, partner arrested
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு