×

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை

புதுடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் புனித யாத்திரை. இது அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்த யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் ெமதினாவுக்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் ரத்து ெசய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு யாத்ரீகர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த  2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும், எந்த பிடித்தமும் இன்றி கட்டணம் திரும்ப வழங்கப்படும்’’ என்றார்.

Tags : Hajj pilgrimage , Corona, Hajj pilgrimage, not allowed
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...