×

ஹே... சிங்கம் களமிறங்கிடுச்சு! பதஞ்சலி மருந்தும் பந்தயத்தில் குதித்தது: விளம்பரத்துக்கு தடை போட்டது மத்திய அரசு

ஹரித்துவார்: கொரோனாவை 7 நாட்களில் குணமாக்கும் என்று கூறி, பதஞ்சலி நிறுவனம் புதிய ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்துள்ளது. ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில் யோகா குருவும், பதஞ்சலி நிறுவனருமான ராம்தேவ், ‘கொரோனில் அண்ட் ஸ்வாசரி’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து ராம்தேவ் கூறுகையில், “நோயாளிகளிடம் புதிய ஆயுர்வேத மருந்து கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 100 சதவீதம் வெற்றி அடைந்தது.

நாடு முழுவதும் 280 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. முதல் முறையாக கொரோனாவை சரிசெய்யும்” என்றார்.

விளம்பரத்தை நிறுத்த உத்தரவு
பதஞ்சலி வெளியிட்டுள்ள மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள கலவைகளின் பெயர்கள்,  மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், இந்த விவரங்களை அளிக்கும்படியும், விற்பனைக்கான விளம்பரத்தை நிறுத்தவும் பதஞ்சலி நிறுவனத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : government ,drug race ,Patanjali ,Central ,Central Government , Patanjali Drugs, Prohibition of Advertisement, Central Government
× RELATED சென்னை முழுவதும் உள்ள விளம்பர...