×

ரூ2,000 கோடி செலவில் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 50,000 வென்டிலேட்டர் தயாரிப்பு: இம்மாத இறுதியில் வழங்கப்படும்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50 ஆயிரம் வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் அலுவலகம் கூறியுள்ள தாவது: பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இதுவரை 2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1,340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவுக்கு 275, டெல்லிக்கு 275, பீகாருக்கு 100, கர்நாடகாவுக்கு 90 மற்றும் ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜூன் இறுதிக்குள் கூடுதலாக 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் டெலிவரி செய்யப்படும். பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிராவிற்கு ரூ.181 கோடி, உபி.ரூ.103 கோடி, தமிழகம் ரூ.83 கோடி, குஜராத்ரூ.66 கோடி, டெல்லி ரூ.55 கோடி, மேற்கு வங்கம் ரூ.53 கோடி தரப்பட்டுள்ளது.

இதுவரை செலவு ரூ3,100 கோடி
இதுவரை, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வென்டிலேட்டர் தயாரிக்க ரூ.2,000 கோடியும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 கோடியும் மற்றும் கொரோனா தடுப்பு பணி கண்டுபிடிப்பு பணிக்காக ரூ.100 கோடியும் என மொத்தம் ரூ.3,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிதியத்திற்கு ரூ.10,000 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Tags : BM Cares Fund, Ventilator Product
× RELATED பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த...